வெள்ளி, 3 ஜூலை, 2020

5பைசா


5பைசா கதை.

2003  அப்போ நா 5 வது படிச்சிட்டு இருந்தே ,நாலு நாள் ஜொரத்துக்கு அப்புறம் 5வது நாள் பள்ளிக்கூடம் போகும்போது வயல் வரப்புல வழுக்கி விழுந்தே,இப்போ இருக்க மாதிரியேதா அப்பவும், விழுந்த உடனே எழுந்து எங்க அடிபட்டதுன்னு பாக்குறதுக்கு முன்னாடி விழுந்தத யாரவது பாத்துடாங்களானு சுத்திமுத்தி   பாத்தே,யாருமில்ல.வாய்க்கால்ல ஓடுற தண்ணியில காலுல படிஞ்ச சேறுபோக கழுவிட்டு இருந்தே,தண்ணி தெளிஞ்சதும்  பளிச்சினு ஏதோ மின்னுச்சி என்னனு மண்ணை அள்ளி பாத்தே  அதுல ஒடஞ்ச வளையல் துண்டும், குட்டி குட்டியா  வயல்சங்கும்,மணலும் கல்லும் அதுக்கு நடுவுல லேசா துருபுடிச்சி கட்டமா கார்னர்ல வட்டமா ஒரு அஞ்சுபைசா.அப்டியே அத டவுசர் பாக்கெட்டில் போட்டுட்டு யாரும் தொறத்தாமலே திரும்பி திரும்பி பாத்துட்டே ஓடுனே.

பள்ளிக்கூடம் போயிட்டு திரும்ப வரும்போது,பசங்களோட சேர்ந்து டெலிபோன் கம்பதுமேல இருக்க பீங்கான் உருண்டைய அடிச்சி ஒடச்சி அத எடுத்து தரையில தேச்சி அந்த பொடியை நகத்துல வச்சி தேச்சியெடுத்தா நகம் பல பலனு இருக்கும். அதையே என்னோட அஞ்சுபைசாக்கும் பண்ணே .. புதுசா ஆகிடுச்சி.பசங்ககிட்ட சொன்னா பூமில இருந்து கெடச்சது சாமிக்குதா சொந்தம்னு உண்டியல்ல போட சொல்வாங்க, அதனால யாருக்கும் சொல்லாம நானே வச்சிகிட்டேன்..

அப்போல இருந்து அத பாதுகாத்துட்டு வந்தே.அது செல்லாகாசா ஆனாலும் ,என்னோட செல்லகாசா என்கூடவே வச்சிகிட்டேன்..எத்தனையோ கிளாஸ் மாறிட்டே,ஊர விட்டு சென்னைக்கும் வந்துட்டேன், காலேஜ் கூடமுடிச்சி வேலைக்கும் போய்ட்டேன்,எத்தனையோ பர்ஸ் மாத்திட்டே போனாலும் எல்லாத்துலயும் மாறாம இருந்தது என் அஞ்சுபைசா.. 2019ம் வருடம் ,ஒரு சனிக்கிழமை நாள்ல ஏரியில மரம்நட  போனப்போ 5பைசா வோட பர்ஸ்சையும் தவறவிட்டுட்டேன்.. பர்ஸு தொலைஞ்சா பரவால்ல என்னோட அஞ்சுபைசா கெடச்சா போதும்னு ரெண்டு நாள் அப்றம் ஏரிக்கு தேடி போனே,அங்க போனா ஏரியவே காணோம்...மரம் நட்டு இருந்த இடத்துல மண்ணகொட்டி இருந்தாங்க.ஜெசிபி வச்சி ஏரியில மண்ணைகொட்டி  போலீஸ் ஸ்டேஷன் கட்றதுக்கான வேலையெல்லாம் நடந்துட்டு இருந்தது. கடுப்புல வீடியோ எடுத்து facebook ல போட்டுட்டேன் .அந்த வீடியோ வைரல் ஆகி tv newspaper னு  வந்துடுச்சி,சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி எரியில போலீஸ் ஸ்டேஷன் கட்ட கூடாதுனு MP கனிமொழி ட்விட்டர்ல அந்த வீடியோவை எடுத்து போட, அப்பாடா ஏதாவது நடந்து வேலை நின்னுடும்னு நெனச்சி காத்தூக்கிட்டுருந்தே.😔அப்டியே ஒரு வருஷமும் ஓடி போய்டுச்சி போலீஸ்ஸ்டேஷனும் கட்டி முடிச்சாச்சி.

 😥ஆனா கட்டமா,கார்னர்ல கொஞ்சம் வட்டமா , அழகா ,கொஞ்சம் அழுக்கா இருந்த என்னோட அஞ்சுபைசா மட்டும் எனக்கு கிடைக்கல..

சின்னதோ பெருசோ  நாம அத எவ்ளோ நேசிக்குறோம் அப்டிங்குறது பொறுத்துதான் அதோட மத்திப்பு இருக்குது.
ஏ எதுக்குன்னுலா எனக்கு தெரியாது'   எனக்கு ரொம்ப புடிக்கும்..   என்கூட ரொம்ப வருஷமா இருந்துச்சி .மண்ணுல மறைஞ்சலும் ஏ கண்ணுலஇருந்து மறையல.. இப்போ ஆயிரம் சம்பாதிக்க முடிஞ்சாலும் அந்த அஞ்சுபைசாவ திரும்ப சம்பாதிக்க முடியல..திருவிழால அம்மாவ தொலச்சிட்டு அழுவுர குழந்தைக்கு வேற அம்மாவ கொடுத்து சமாதானபடுத்த முடியாது.அதுமாதிரிதா கிடைக்குற அஞ்சுபைசா எல்லாம் என்னோடது ஆகிடாது..

ஒரு பொருள் நம்மகிட்ட இருக்கும்போது அதோட அரும தெரியாது அது நெசம்தா.இருக்கும்போதே அத பத்திரமா பாதுகாத்து வச்சிகனும் அது பொருளா இருந்தாலும் சரி எதுவா இருந்தாலும் சரி..

எல்லோருக்கும் அது வெறும் அஞ்சுபைசாதான் ஆனா எனக்கு அது அஞ்சுபைசாக்கும் மேல..
                                                 _நாதன் 

5பைசா

5பைசா கதை. 2003  அப்போ நா 5 வது படிச்சிட்டு இருந்தே ,நாலு நாள் ஜொரத்துக்கு அப்புறம் 5வது நாள் பள்ளிக்கூடம் போகும்போது வயல் வரப்புல வழு...